Tuesday, June 22, 2010

மச்சம் !

உன்
உதட்டருகே
உலா வந்து
உயிர் வாங்குதே மச்சம்..
சத்தியமாய் நீயின்றி மனசுக்குள்
ஏதுமில்லை மிச்சம்!

2 comments:

முல்லை அமுதன் said...

nalla kavithai.

--Zayd Mohammed-- said...

உன் முகம் பார்த்து ஓர் கவிதை புனை என்றாய்.....
பார்த்தேன் உன்முகம்.... பறிகொடுத்தேன் என் மனம்...
உயிரில் துளையிட்டதடி உன் உதட்டின் மேலுள்ள மச்சம்.....
புனைந்தேன் ஓர் கவிதை.... கனவிலும் நினைக்கவில்லை ஆகுமென்று அது என் காதல் கதை....
-------------------------------
"உன் மச்சம் பார்க்க வேண்டும் மரணத்தின் விளிம்பில் நின்று"
"என் அச்சம் நீக்க வேண்டும் நின் பாfதர் பிரதர் கண்டு"
--------------------------------
எழுதி முடித்தேன் இருவரியில்... எண்ணவில்லை முடிக்கும் இது என் கதையை.....
கற்கயுடன் காலம் கடந்துபோக..... காதலில் விழுந்துபோனேன் ஆழமாய்.......
சொல்லவில்லை யாரிடமும்.... ஆனால் கசிந்துபோனது கண்சிமிட்டும் நேரத்தில்.....
அவளும் விழுந்துபோனாள்.... கவிதைகள் அவள் டயரியிலும்........
ஆனாலும் நாம் பகிரவில்லை எம் காதலை....... உள்ளுக்குள்ளே ஊறிக்கிடந்தது.....
ஒருநாள் வந்தான் அவள் அண்ணன்.... உருகிக்கேட்டான் தந்துவிடு என் "தங்கையை என்னிடம்"...
உருகிப்போனேன் நான் ஓர் மெழுகுவர்த்தியாய்..... ஆனால் உடைந்துபோகவில்லை நான் ஓர் கண்ணாடியாய்!
வைத்தேன் ஓர் முற்றுப்புள்ளி... என் நெஞ்சத்தில் அது ஓர் கரும்புள்ளி!
காலம் கரைந்தது..... நான்கு வருடங்களுக்கு பின் யாருக்கு தெரியும் நீ மீண்டும் வருவாயென என் வாழ்வில்.....
ஏனடி தள்ளிபோன என்னை ஈர்தெடுத்து தீயில் வீசிக்கொன்றாய்???
ஏனடி ஒதுங்கிப்போன என்னை அருகில் அழைத்து இதயத்தில் அமிலம் இட்டாய்???
ஏனடி எல்லாம் மறந்து இருந்த என் மனதுக்கு மறுபடியும் ஞாபகம் ஊட்டி என்னை மரணம் வரை வதைக்கப் பார்க்கிறாய்????
ஒரு வார்த்தை நீ சொல்லியிருந்தால் என் உயிரையும் தந்திருப்பேனடி!!
ஒரு கண் அசைத்திருந்தாலும் என் இதயத்தை கொய்து உன் காலடியில் போட்டிருப்பேனடி!!!
ஏனடி என்னை பழிதீர்கிறாய்??? கவலை கொள்ளாதே.... நீ என்னை தண்டிக்க தேவையில்லை...... நானே என்னை தண்டித்துக்கொள்கிறேன்!
என் மரணம் வரை நான் தனிமையில் உனக்காக வாழ்ந்திருப்பேன் இதுதான் நான் உனக்கு தரும் பரிசு; நான் எனக்கே கொடுக்கும் தண்டனை!!
--Zayd Mohammed--